சினிமா செய்திகள்

அதர்வா தம்பி திருமணம் – விஜய் 64 தயாரிப்பாளர் மகளை மணக்கிறார்

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம்.

2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. 

இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் காதல் கைகூடத் தாமதம் ஆகியிருக்கிறது.

இன்னொரு பக்கம், அண்ணனுக்குத் திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆகாஷ் சொன்னதாலும் தாமதமானதாம்.

இப்போது எல்லாம் சரியாகி, இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமண நிச்சதார்த்தம் நடக்கவிருக்கிறதாம்.

இதையொட்டி தன் வருங்காலக் கணவருக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள கார் பரிசளித்திருக்கிறாராம் சினேகா.

விரைவில் நிச்சயதார்த்தம் அப்போதே திருமணம் குறித்த அறிவிப்பு ஆகியன நடக்கவிருக்கிறதாம்.

Related Posts