ஜீவாவுடன் நடிக்க மறுத்த நடிகைகள் – கோபத்தில் படக்குழு
நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படம், கோல்மால் என்கிற படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் புதியபடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ஜீவா.
அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேடல் நடந்துகொண்டிருக்கிறது.
அதற்காக, சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காமோகனை அணுகினார்களாம்.
அவரோ, நான் சிவகார்த்திகேயன், சூர்யா ஆகிய பெரிய ஹீரோக்களோடு நடித்தவள் என்னால் ஜீவாவுடன் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.
அதன்பின், மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த கல்யாணிபிரியதர்ஷனை நடிக்கக் கேட்டு அவருடைய மேலாளரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
அவரும் ஜீவாவுடன் நடிக்கவியலாது என்று மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கல்யாணியிடம் சொல்லாமலே மேலாளரே இந்த முடிவைச் சொல்லிவிட்டார் என்கிற தகவலறிந்து ஜீவா படக்குழு கோபத்தில் இருக்கிறதாம்.











