மணிரத்னம் கொடுத்த மதுவிருந்து – த்ரிஷா அட்டகாசம்

செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
திரையுலகில் இப்படியான வெற்றிகள் அமைந்துவிட்டால், உடனே பார்ட்டி பார்ட்டி என்று ஆரம்பித்துவிடுவார்கள்.
அதற்கு மணிரத்னமும் விதிவிலக்கல்ல.
அவருடைய பெசண்ட்நகர் வீட்டில், பொன்னியின் செல்வன் வெற்றியைக் கொண்டாட ஒரு மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஓர் இசைக்குழுவின் ஆடல்பாடல்களுடன் அட்டகாசமாக நடந்துள்ளது விருந்து.
அவ்விருந்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
விக்ரம், ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உட்பட பலர் கலந்துகொண்ட அவ்விருந்தில், விக்ரம் மட்டும் மது அருந்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
த்ரிஷாதான் மிகவும் அதிகமாகப் போய்விட்டாராம். அளவுக்கு அதிகமாகக் குடித்து வாந்தி எடுத்து அவ்விடத்தையே நாசம் செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அதேபோல், பார்த்திபன் மகள் கீர்த்தனாவும் அளவுக்கதிகமான குடியாம். அவர் போட்ட ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட பார்த்திபன் அவ்விடத்தைவிட்டே ஓடிப்போய்விட்டாராம்.
சந்தோசத்தைக் கொண்டாட ஒன்றுகூடினால் இதுபோன்ற சிலரால் சங்கடங்கள். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அதைப்பற்றிப் புலம்பியதால் ஒரு வீட்டுக்குள் நடந்த விசயம் இப்போது திரையுலகில் கமுக்கமாகப் பேசிச்சிரிக்கும் சம்பவமாகிவிட்டது என்கிறார்கள்.