சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.
ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பான வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். தேதிகள் ஒத்துவந்தால் அவரே நாயகியாக நடிப்பார் என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ்ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு அனிருத், டி.இமான் ஆகியோர்தான் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அயலான் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











