சினிமா செய்திகள் நடிகர்

அஜித் உதவி செய்தது உண்மை – வரிந்து கட்டிய உதவி இயக்குநர்

மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள்.

அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது.

நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமாத்துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்போதுதான் முதன்முதலில் ‘ஜனா’ படப்பிடிப்பில் அஜித்தைச் சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையைக் கூறினேன். அப்போதே முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

இது பொய் என்று ஓர் உதவி இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி முற்றிலும் பொய்.இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது..
அஜித்திடம் பேசியது நான்.. அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக ஒரு பண உதவி செய்யவில்லை…அஜித் சாரிடன் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பிவருகிறார்.

என்று அவர் சொல்லியிருந்தார். முகநூலில் அவர் இப்படிக் கருத்து சொன்னதும் பின்னூட்டத்தில் வந்தவர்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டார்கள்.

ரோஜா ரமணனுக்காக அஜித் சாரிடம் உதவி கேட்டு சென்ற குழுவில் நானும் ஒருவன். அஜித் சாரிடம் பிரதானமாக பேசியது நீங்கள் தான் இலக்கியன். ஆனால் அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்தது வரலாறு படம் அல்ல., வில்லன். அஜித் சாரின் சார்பாக ராஜா என்பவரின் முலமாக 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ரோஜா ரமணின் பெயருக்கு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சம்பந்தப்பட்டவர் எந்தப்பதிலும் சொல்லவில்லை.

Related Posts