சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதிய படத்துக்கு இன்று பூஜை

இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப்படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருந்தார். அந்தப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று நடந்திருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் அலுவலக மாடியில் சிறிய அளவில் பூஜை நடந்திருக்கிறது. இந்தப்படத்துக்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Posts