October 18, 2026
சினிமா செய்திகள்

ரஜினி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், இன்று மாலை 6 வெளியானது.

படத்தின் பெயர் பேட்ட என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டை என்பதன் பேச்சு வழக்கு இச்சொல் என்று சொல்லப்படுகிறது.

Related Posts