ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். அவர் தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.
அந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர்.
இப்படத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா ஆகிய வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ், தனது அடுத்த படத்தை பெருமிதத்துடன் துவங்குகிறது. நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த, தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூமுருகன் முழு கமர்ஷியல் படமாக இயக்குகிறார். கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். ஜிப்ஸி என்னும் தலைப்புடன் தொடங்கும் இப்படத்துக்கு வழக்கம்போல உங்கள் ஆதரவே ஆணிவேராகும்.
வணக்கத்துடன்
அம்பேத்குமார்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











