சினிமா செய்திகள்

கமலின் இந்தியன் 2 தள்ளிப்போனது. எதனால்?

ரஜினியின் 2.ஓ படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கவிருக்கும் படம் இந்தியன் 2.

கமல் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்‌ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14 அன்று (அதாவது இன்று) தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.

எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது, ஏன் தடை?

வேறொன்றுமில்லை, அந்தப்படத்துக்காக பிரமாண்ட ஒரு செட் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணிகள் நிறைவடைந்திருந்தால் இன்று படப்பிடிப்பு தொடங்கியிருக்குமாம்.

அதன் பணிகள் திருப்திகரமாக முடிவடையவில்லை என்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போயிருக்கிறது.

அடுத்து எப்போது?

2019 சனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். பொங்களுக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts