அஜீத் கேட்ட எண்பது கோடி – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருக்கிறது.
இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜீத் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.
அந்தப்படத்தை இயக்க விஷ்ணுவர்த்தனைப் பரிந்துரைத்திருக்கிறாராம் அஜீத்.
அதோடு,அந்தப்படத்துக்குச் சம்பளமாக எண்பது கோடி கேட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.
வலிமை படத்தில் அஜீத்தின் சம்பளம் ஐம்பது கோடி என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்த படத்துக்கு முப்பது கோடி அதிகமாகக் கேட்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இன்னும் இது தொடர்பான பேச்சுகள் இறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.
சம்பள விசயத்தில் அஜீத் இறங்கிவந்தால்தான் அடுத்த படம் உறுதியாகும் என்றும் சொல்லப்படுகிறது.











