சினிமா செய்திகள்

மாநாடு தொடங்கியது – முதல்நாளில் சிம்பு கொடுத்த ஆச்சரியம்

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.

இப்படத்தில்  பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். 

இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று தொடங்கப்பட்டுள்ளது.தியாகராயநகரில் முதல்நாள் படப்பிடிப்பு பூசையுடன் தொடங்கியிருக்கிறது.

சிம்பு, நாயகி கல்யாணி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர், தயாரிப்பாளர் கலைப்புலிதாணு இயக்குநர் பாரதிராஜா, நிதியாளர் அன்புச்செழியன் ஆகிய பலர் பூசையில் கலந்துகொண்டனர்.

காலை ஒன்பது மணிக்கு பூசை அதைத் தொடர்ந்து அப்படியே படப்பிடிப்பு என்று சொல்லியிருந்தார்களாம்.

அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் காலை எட்டேகால் மணிக்கே படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து எல்லோரையும் மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார் சிம்பு.

இதனால் மிக உற்சாகமாக முதல்நாள் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். 
இப்படியே தொடரட்டும்.

Related Posts