ரேட்டிங்கில் பின் தங்கிய ஹீரோ – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி
ரஜினி,கமல், விஜய்,அஜீத், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் நிரம்பி வழியும்.
அதுபோலவே இவர்கள் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்திலும் பெரும்பாலான மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.
அதுவும் முதன்முறை அப்படம் ஒளிபரப்பாகிறதென்றால் கேட்கவே வேண்டாம். மக்கள் எல்லாம் அப்படத்தைத் தான் பார்ப்பார்கள்.
அதனால் அந்த முன்னனி நடிகர்களின் படங்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போட்டி போடும்.
இந்த நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாகும்போது குறைந்தது 22 டிவிஆர் என்கிற அளவில் ரேட்டிங் பெறும். 23, 24 என்று வந்தால் மிக அதிகம். மிகக் குறைவான ரேட்டிங் என்றாலும் 18 டிவிஆர் வரும்.
இந்த அடிப்படையில் தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது அதிகப்பார்வையாளர்களைப் பெற்றுவந்தன சிவகார்த்திகேயன் படங்கள்.
மே 24 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.அப்படம் இதுவரை ஒளிபரப்பப்பட்ட சிவகார்த்திகேயன் படங்களைவிட மிகக்குறைந்த ரேட்டிங்கை பெற்றுள்ளது.
ஹீரோ படம் 13.9 டிவிஆர் என்கிற ரேட்டிங்கை பெற்றுள்ளது.பொதுவாக சன் தொலைக்காட்சியில் ஒரு புதிய படம் ஒளிபரப்பானாலே 16 அல்லது 18 என்கிற ரேட்டிங்கை பெறும்.
ஆனால், சிவகார்த்திகேயன் படம் 14 டிவிஆர் என்கிற குறைவான ரேட்டிங்கை பெற்றிருப்பது சன் தொலைக்காட்சியையும் சிவகார்த்திகேயனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்கிறார்கள்.










