சினிமா செய்திகள்

விக்ரம் நடித்த கோப்ரா – உதயநிதி கைப்பற்றினார்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 27,2022) இரவு, ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் வழிமொழிந்துள்ளது.

அண்மையில் மாபெரும் வசூலைப் பெற்ற கமல்ஹாசனின் விக்ரம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்த இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts