சினிமா செய்திகள்

தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

அடுத்து, சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம், மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றில், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படத்தை ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார்.இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் முதல்வாரத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts