சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படம் தள்ளிப்போகிறதா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விசுவாசம். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இயக்குநர் சிறுத்தைசிவா, திரைக்கதையை முழுமையாக எழுதிவிட்டு தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்களாம். எனவே திரைக்கதையை மாற்றி எழுதப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம் என்றும் செய்திகள் உலாவருகின்றன.

படக்குழுவின் தரப்பில் இதுபற்றிக் கேட்டால், படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கும். இம்மாதம் 23 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts