சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார் அரவிந்த்சாமி – விவரங்கள்

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன.

இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர்.

ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம்.

அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக சூப்பர்ஸ்டாராக வலம்வந்து கொண்டிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தனா மற்றும் சிவாஆனந்த் ஆகியோர் இணைந்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்களாம்.

அதில்தான் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார்.

அத்தொடரை இயக்குநர் வசந்த் இயக்கவிருக்கிறாராம்.

இதை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்கிறார்கள்.

Related Posts