சினிமா செய்திகள் நடிகர்

இரண்டு நாயகிகளுடன் இணையும் சுந்தர் சி

இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி.

கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

சுந்தர் சி க்கு மிகவும் பிடித்த த்ரில்லர் வகைப்படமாக உருவாகவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக தன்ஷிகா லட்சுமிராய் ஆகிய இருவரும் நடிக்கவிருக்கிறார்களாம்.

பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டி போன்ற மலைப்பிரதேசத்திலேயே நடைபெறவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts