காப்பான் படத்தில் என் வேடம் இதுதான் – ஒப்புக்கொண்ட சூர்யா
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மோகன்லாலின் முகநூல் பக்கத்தில், அவருடைய நேர்காணல் ஒளிபரப்பானது. அதில்,காணொலி மூலம் சூர்யா பேசினார். அப்போது ‘காப்பான்’ குறித்து ஏதாவது பகிர்ந்து கொள்ளும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சூர்யா, ‘இது ஏற்கெனவே ஊடகங்களில் வெளியான செய்திதான். அதை இப்போது நான் உறுதி செய்கிறேன். மோகன்லால் சார் பிரதமராகவும், அவரைப் பாதுகாக்கும் எஸ்பிஜி (Special Production Group) அதிகாரியாக நானும் நடிக்கிறேன்’
இவ்வாறு சூர்யா கூறினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஒரிசாவில் நடந்துவருகிறது.











