பிரபல நடிகர் இரண்டாம் திருமணம் – மலையாள நடிகையை மணந்தார்
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான ‘தா’ படம் மூலம் திரைப்படக் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி,பைரவா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர், மும்பையைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் அம்ரிதா கல்யான்பூரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஒரே வருடத்தில் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.
பின்னர், மலையாள நடிகையான சின்னு குருவில்லாவை, ஹரீஷ் உத்தமன் காதலித்து வந்தார். சின்னு, மலையாளத்தில் நார்த் 24 காதம், கசபா, லுக்கா சுப்பி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் கேரளாவின் மாவேலிகராவில் நேற்று (சனவரி 20,2022) பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்கள் மூலமே இத்தகவல் வெளியாகியுள்ளது. இத்திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பையும் ஹரிஷ் உத்தமன் வெளியிடவில்லை.












