சினிமா செய்திகள்

தேள் ரிலீஸ் தள்ளிப் போனது எதனால்?

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள்’. ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் வெளியாகாது என்றே சொல்கிறார்கள். காரணம் என்னவென்று விசாரித்தால், திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதே பதிலாக வருகிறது.

பிரபுதேவா நடித்து சமீபத்தில் வெளியான எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. 2018ல் குலேபகாவளி, மெர்க்குரி மற்றும் லக்‌ஷ்மி, 2019ல் சார்ளிசாப்ளின் 2, தேவி 2 மற்றும் இந்த வருடம் பொன்மாணிக்க வேல் என பிரபுதேவா நடித்து வெளியான எந்தப் படமும் சரியாக கலெக்‌ஷன் கொடுக்கவில்லை. ஓடிடியில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்துக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை.

இதனால், திரையரங்குகளில் பிரபுதேவா படத்தைத் திரையிட யாரும் முன்வரவில்லை என்றே கூறுகிறார்கள். அதோடு, இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் உள்ளிட்ட சில படங்கள் திரைக்கு வருகிறது. அதோடு, 200 திரையரங்குகளுக்கு மேல் சிம்புவின் மாநாடு படமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், தேள் தள்ளிப் போகிறது.

நல்ல ரிலீஸ் தேதி கிடைத்ததும் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

Related Posts