கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள்’. ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் வெளியாகாது என்றே சொல்கிறார்கள். காரணம் என்னவென்று விசாரித்தால், திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதே பதிலாக













