September 15, 2026
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு இராஜபக்சே மகன் புகழாரம் – உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றெல்லாம் பேசியவர்.

இதனால் உலகத்தமிழர்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அவருடைய வாழ்க்கைக் கதையில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக இருக்கிறார்.

எனவே,அப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 8,2020 அன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிபப்பைத் தொடர்ந்து விஜய்சேதுபதியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…

பல குழப்பங்களுக்கு மத்தியில் நம் லெஜண்டரி ஸ்பின்னர் முத்தையாமுரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்கிற நல்ல செய்தி வந்திருக்கிறது.பல்திறன் கொண்ட இவர் நடிப்பதுதான் சிறப்பு என்று வாழ்த்தியிருக்கிறார்.

அதோடு விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என்கிற பட்டப்பெயர் வைத்து வாழ்த்தியிருப்பதோடு படம் பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

நாமல்ராஜபக்சே வாழ்த்துச் சொன்னதும் விஜய்சேதுபதிக்கு எதிராக ஏராளமான பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Related Posts