சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் சர்கார் ரஜினியின் பேட்ட செய்திகளால் கடும் மோதல்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

வாரணாசியில் ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (அக்டோபர் 19) மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், அதுகுறித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. ஷெட்யூலுக்கு 15 நாட்கள் முன்பே முடிந்துவிட்டது. சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்பராஜ், திரு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எல்லோருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த ட்வீட்டை இன்று (அக்டோபர் 19,2018) மாலை 6.50 மணிக்கு ரஜினி வெளியிட்டார்.

இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் வெளியானது. வெளியான சில நிமிடங்களில் பல இலட்சம் பார்வையாளர்களைப் பெற்று அந்த டீசர் சாதனை செய்தது.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரஜினியின் இந்த் ட்வீட் வெளியானதால், எங்கள் தளப்தியின் டீசர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு இடையூறு செய்யும் நோக்கிலேயே இப்போது ட்வீட்டை ரஜினி வெளியிட்டார் என்று சொல்லி ரஜினியை திட்டத்தொடங்கினர்.

பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு எதிராகப் பேச ட்விட்டர் தீப்பற்றி எரிகிறது.

Related Posts