சினிமா செய்திகள்

தனுஷுடன் மோதல் வேண்டாம் – பா.இரஞ்சித் முடிவு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்துள்ள படமாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் அமைந்துள்ளதாம்

இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது.

இப்போது அதன் வெளியீட்டுத் தேதி மாறியிருக்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.இதை படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.

இதனால் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்துடன் மோதல் விலகியிருக்கிறது.

இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை சக்ஸஸ் ஆட் கம்பெனியின் ஸ்ரீ உருமநாதர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறதாம்.

சுமார் மூன்று கோடி எம்ஜிக்கு இப்படம் வியாபாரமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts