சினிமா செய்திகள்

கோபித்துக் கொண்டு போன இர்பான் பதான் – விக்ரம் 58 பட தகவல்கள்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு தற்காலிகமாக விக்ரம்58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்துகொண்டிருக்கிறது.

முதல்கட்டப் படப்பிடிப்பில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கலந்து கொண்டார். அது முடிவடைந்ததும், வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க “I’m waiting”

என்று ட்விட்டரில் சொல்லியிருந்தார் இர்பான்பதான்.

அதேசமயம், முதல்கட்டப்படப்பிடிப்பில் பல குழப்பங்கள் நடந்ததாம்.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களுக்குள் ஒளிப்பதிவாளரை மாற்றினார்களாம். அடுத்த சில நாட்களில் அவரையும் மாற்றிவிட்டு முதல் ஒளிப்பதிவாளரைக் கூட்டிவந்தார்களாம்.

அதோடு இர்பான் பதான் நடிக்க வந்த முதல்நாளே அங்கு நடக்கும் குழப்பங்களைப் பார்த்துவிட்டு கோபித்துக் கொண்டு போய்விட்டாராம். அடுத்த நாள் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். அதன்பின் அவரை சமாதானம் செய்து அழைத்துவந்தார்களாம்.

இதெல்லாம் விக்ரம் படப்பிடிப்புக்கு வரும்வரைதான். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட நேரத்தில் எல்லாம் சரியாகி இப்போது சுமுகமாக நடக்கிறதாம்.

Related Posts