சினிமா செய்திகள் நடிகர்

பாதை மாறிய விஜய்சேதுபதி, இது சரியா?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.இது இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணை சேருகிறார் அஞ்சலி. மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா 21.04.2018 அன்று சென்னையில் நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாகப் படக்குழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன்,படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்,

இந்தப்படத்தை, பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ்( பி) லிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இவர்கள் ஏற்கெனவே பியார் பிரேமா காதல் என்ற படத்தைத் தயாரித்துக்கொண்டு இருகிறார்கள்.

இரண்டாவதாக இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

விஜய்சேதுபதி படம் என்றால் வித்தியாசமான கதையம்சம் மட்டுமின்றி நடிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும். அவரும் ஆக்‌ஷன் ஹீரோ ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

இது சரியா? தவறா? என்பதை இந்தப்படம் தீர்மானிக்கும் என நம்பலாம்.

Related Posts