சினிமா செய்திகள் நடிகர்

அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு – புதிய தகவல்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தின் நடிக்கவிருக்கிறார் அஜித்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

2018 தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் மார்ச் 23 முதல் படப்பிடிப்பு என்றார்கள். வேலைநிறுத்தம் வந்ததால் அது நடக்கவில்லை.

இப்போது மே 4-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவலாவது உண்மையாக வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Related Posts