சினிமா செய்திகள்

விஜய்யுடன் போட்டி – வேகமாகத் தயாராகும் சிம்பு

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.சுசீந்திரன் இயக்கும் இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அக்டோபர் பத்தாம் தேதி சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஒவ்வொரு நாள் காலையிலும் ஏழுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிடுகிறார் என்றும் மாலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு தாமதமானாலும் இருந்து முடித்துக்கொடுத்துவிட்டுத் தான் அறைக்குச் செல்கிறாராம்.

இந்தப்படத்துக்கு, வாய்மையே வாகை சூடும் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படம் வேகமாகத் தயாராகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இப்படத்தை 2021 பொங்கல் நாளில் திரைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று தயாரிப்பாளர் திட்டமிடுகிறாராம்.

ஏற்கென்வே விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லையெனினும் மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என்றும் அப்படத்தோடு போட்டியிட சிம்பு படக்குழுவும் தயாராகிறது என்கிறார்கள்.

Related Posts