விளையாட்டு வீரரை வியப்பில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்
அண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
அந்த சதீஷ்குமாரை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு ஒன்றை வழங்கினார் சிவகார்த்திகேயன்.
இது குறித்து சதீஷ்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பதக்கத்துடன் அவரைச் சந்தித்தது உண்மையில் நேசித்தேன். அவருடைய வார்த்தைகள் எனக்கு உண்மையில் மிகவும் ஊக்கமளித்தன. அவருடைய வாழ்க்கையில், கடின உழைப்பால் கொண்டாடப்பட வேண்டிய, ஆச்சரியப்பட வேண்டிய ஒரு நட்சத்திரம். உங்கள் அன்பான பரிசுக்கு மிக்க நன்றி சகோதரா என்று சொல்லியிருக்கிறார்.











