சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் – செய்தியும் சர்ச்சையும்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

திரையரங்குகள் மூடியிருப்பதால், ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

பேச்சுவார்த்தை முடிவடைந்து, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘டாக்டர்’ வெளியாகவுள்ளது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

ஆனாலும் இந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டு, டாகடர் படக்குழு ஓடிடியில் படத்தை வெளியிடுவது என்கிற முடிவை எடுக்கவேண்டாம். விரைவில் திரையரங்குகள் திறக்கவிருக்கின்றன. திரையரங்குகளிலேயே படத்தை வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இன்னொருபக்கம், சிவகார்த்திகேயன் இரசிகர்களும் இப்படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று சமூகவலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

படக்குழுவினர் என்ன முடிவெடுக்கப்போகிறார்களோ?

Related Posts