சினிமா செய்திகள்

சின்மயி செய்த செயல் மணிரத்னம் கோபம் – விவரம்

கமல் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. அதில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பாடகர்களால் மேடையில் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெறும் முத்தமழை எனத் தொடங்கும் பாடலை சின்மயி பாடினார்.அவர் பாடல் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.

படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை பாடகி தீ பாடியுள்ளார்.ஆனால் மேடையில் பாடியது சின்மயி.நிகழ்ச்சி நடந்த நாளில் வேறு நிகழ்ச்சி இருந்ததால் பாடகி தீயால் அங்கு வரமுடியவில்லை.எனவே சின்மயி பாட வைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, எல்லோருக்கும் தெரிந்து, சின்மயி பாடிய பாடல் நன்றாக உள்ளதா? அல்லது தீ பாடியது சிறப்பாக உள்ளதா? என்கிற விவாதம் நடந்துவருகிறது. அதில், சின்மயி பாடலில் காதலும், காமமும் ததும்பி வழிவதாகவும், தீ பாடல் ஏக்கம் கலந்த தொனியில் உள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில் சின்மயி பாடலே சிறப்பாக உள்ளதாக பலரும் பாராட்டி வருவதாகச் செய்திகள் வருகின்றன.

எல்லோருக்கும் தெரியாத ஒரு தகவலும் திரையுலகில் உலவுகிறது.

அது என்ன தெரியுமா?

அவர் குரலுக்கு வரவேற்பு கிடைத்ததும் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் சின்மயி.ஆந்திராவில் ஒரு பிரபல நடிகைக்கு விளம்பரப் பணிகளில் ஈடுபடும் நிறுவனத்துடன் ஒப்ப்ந்தம் செய்துகொண்டு தான் பாடிய பாடல்தான் சிறப்பு என்கிற கருத்தை உருவாக்கினார்.அவர் குரலும் மக்களுக்குப் பிடித்திருந்ததால் அந்தக் கருத்தை அனைவரும் ஏற்கின்றனர்.அதோடு நில்லாமல் அடுத்த கட்டத்துக்குச் சென்று, தீ பாடியதைவிட சின்மயி பாடியதுதான் நன்றாக இருக்கிறது.எனவே சின்மயி பாடியதைப் படத்தில் வைக்க வேண்டும் என்று மணிரத்னத்தை வலியுறுத்தும் அளவுக்குப் போய்விட்டனர்.

இதனால், இயக்குநர் மணிரத்னம் மிகவும் கோபமாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.நிகழ்ச்சியன்று தீ வர முடியாததால் சின்மயியை பாட வைக்க ஒப்புக்கொண்டேன்.இப்போது என்னிடமே சின்மயி பாடியதுதான் சிறந்தது என்று சொல்வீர்களா? என்று அவர் கோபம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

Related Posts