சினிமா செய்திகள்

தனுஷின் அசுரன் பட அறிவிப்பு இன்று வெளியானது எதனால்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படங்களில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். மூன்றுமே வெற்றிப்படங்கள் என்று சொல்லப்படுவதால் இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.

இவர்களின் வடசென்னை படத்தைத் தொடர்ந்து, தற்போது இந்தக் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு `அசுரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இதை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அதில், `மாரி 2 படத்தின் வெற்றிச் செய்தி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், எனது அடுத்த படமான `அசுரன்’ அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெற்றிமாறன் இயக்க, தாணு சார் தயாரிக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனோடு `அசுரன்’ படத்தின் முதல்பார்வையையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

மாரி 2 வெளியாகி ஒரேநாளில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அதற்குக்காரணம் மாரி 2 படத்துக்கு சரியான வரவேற்பு இல்லை. அதை மறைக்கவே இந்த அறிவிப்பு வெளியானது என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் மூன்று வார பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் தனுஷும் செல்கிறார்.போவதற்கு முன் அறிவிப்பை வெளியிட்டுவிட்டால் நல்லது என்கிற படக்குழுவின் விருப்பத்தை நிறைவேற்றவே இன்று அந்த அறிவிப்பு வெளியானது என்கிறார்கள்.

Related Posts