அதிர்ச்சியில் காஞ்சனா 3 படக்குழு – நம்பிக்கை பொய்யானது
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம், ‘காஞ்சனா-3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷினி, டெல்லி கணேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்துடன் சென்று படத்தைப் பார்க்கலாம் என்ற பெயரைச் சம்பாதித்துள்ளது. ‘காஞ்சனா-3’ படத்துக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வருகிறார்கள்.
இந்தநிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ‘காஞ்சனா-3’ படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகாது என்கிற நம்பிக்கையை இந்தப்படம் பொய்யாக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.











