September 15, 2026
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யுடன் போட்டிக்குத் தயாரான தனுஷ்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருக்கிறது.

ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.அப்போதிருந்து சின்னச் சின்ன இடைவெளிகளுடன் தொடர்ந்தது படப்பிடிப்பு. சில நாட்களுக்கு முன்பு தனுஷ் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிவடைந்தன. நேற்றுமுன்தினம் முழுமையாக முடிவடைந்தது.

கடைசிநாள் படப்பிடிப்பில் சசிகுமார் மேகா ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டார்.

இப்படம் தீபாவளி நாளில் வெளியாகவிருக்கிறது.

அதேநாளில் விஜய் நடித்த சர்கார் வெளியாகவிருக்கிறது.

சூர்யாவின் என் ஜி கே, அஜித்தின் விஸ்வாசம் ஆகியன அதேநாளில் வெளியாவதாக இருந்து பின்பு தள்ளிப்போய்விட்டது.

இப்போது தனுஷ் படம் சர்காருடன் போட்டி போடத் தயாராகிவிட்டது.

Related Posts