சினிமா செய்திகள்

சிம்பு ஓவியா படத்துக்கு ஏ சான்றிதழ்

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார்.

பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில், அழகுநிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் துணிச்சலான பெண்ணாக ஓவியா நடித்துள்ளாராம்.

இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறையினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இரட்டை அர்த்த வசனங்கள் இந்தப் படத்தில் நிறைய இடம் பெற்றிருப்பதால் இந்தச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சிம்பு இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளனவாம்.

இம்மாதம் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts