இயக்குநர் பாலா படத்துக்கு இப்படி ஒரு நிலையா? -அதிர்ச்சியில் திரையுலகம்
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப்படத்தின் மொழிமாற்றுதான் ‘வர்மா’. பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது.
2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
படத்தைத் தயாரித்திருக்கும் ஈ 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்…..,
அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தோம்.
படம் முழுமையாக முடிவடைந்த பிறகு பார்த்தால் அதில் எங்களுக்குத் திருப்தியில்லை. அதனால் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்.
புதிதாக மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்.அர்ஜூன்ரெட்டி படத்தின் பெருமை குறையாத விதத்தில படமாக்கவிருக்கிறோம்.
இப்படத்தில் நடித்த துருவ் நாயகனாக நடிப்பார். இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்.
இதனால் எங்களுக்கு நட்டம்தான், ஆனாலும் நல்ல படத்தைக் கொடுக்கவே இம்முடிவு. புதிய படத்தை ஜுன் 2019 இல் வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.
திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதுவும் பல சாதனைகளைப் படைத்த இயக்குநர் பாலாவுக்கு இப்படி நடந்துள்ளது திரையுலகில் பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











