இந்த மாதம் சூர்யா மாதம் -அடுக்கடுக்கான அற்விப்புகளால் ரசிகர்கள் கொண்டாட்டம்
ஏப்ரல் மாதம் தொடங்கி இன்றோடு 22 நாட்கள் ஆகின்றன.
அதற்குள், இந்த மாதம் சூர்யா மாதம் என்று சொல்கிற அளவுக்கு அடுக்கடுக்காக சூர்யா நடிக்கும் படங்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன.
அவை….
1. ஏப்ரல் 5 சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 படம் வெளியானது.
2., இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது.
3.அப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
4.ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தில் இடம்பெற்றுள்ள தண்டல்காரன் என்கிற ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
5.அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 13 அன்று சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் சூரரைப் போற்று என்கிற அறிவிப்பு வெளியானது.
6.அதற்கடுத்த நாள் ஏப்ரல் 14. அன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீசர் வெளியானது.
7.இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படி வரிசையாக சூர்யா பட அறிவிப்புகள் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..











