செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் இணையும் லாபம் – இன்று தொடங்கியது

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன.அந்தப் படத்தின் பெயர் லாபம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். லாபம் படத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் லாபம் படத்தை இயக்குகிறார்.

பருத்திவீரன்,இரண்டாம் உலகம், தனி ஒருவன் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது படக்குழு சொல்லும் உறுதிமொழி.

இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

Related Posts