செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் பிரபலங்களும் பங்குபெறும் புதுநிகழ்ச்சி – விவரம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்திருக்கும் சன் தொலைக்காட்சி, புதிய புதிய நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் முன்னணியில் இருக்கிறது.

அந்த தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி பற்றிய விவரம்…..

சன் தொலைக்காட்சி மற்றும் மீடியா மேசன்ஸ் (Media Masons) ஆகிய நிறுவனங்கள்இணைந்து உங்கள் ஞாயிற்றுகிழமைகளை குதூகலிக்க செய்ய வருகிறது “நானும்ரௌடிதான்” நிகழ்ச்சி.

இதில் குழந்தைகள் மற்றும்பெரியவர்கள் மோதும் பிரமாண்டமான விளையாட்டுநிகழ்ச்சியாக உங்களை மகிழ்விக்கும், இது விளையாட்டுநகைச்சுவை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை பிரமிப்பூட்டும்வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைகுடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கும்படியான நினைவாற்றல், பொது அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் ஜனரஞ்சகமானபோட்டியாகும்.

ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு சுவையான, பரபரப்பான, சுற்றுகள் இடம்பெறும்.

இதில் பெரியவர்கள் சிறிய‘ரௌடிகளை’ எதிர்கொண்டு அவர்களைத் தோற்கடிக்கவேண்டும். Sun TV-யின் பிரபலமான அஸ்வத் பெரியவர்களின்அணியை வழிநடத்த, மக்களின் ஏகோபித்த அபிமான சிவாங்கிகிருஷ்ணகுமார் தனது முதல் முழுமையான தொகுப்பாளர்பொறுப்பை எப்போதும் போல மிக சுவாரஸ்யமாககுழந்தைகளின் அணியை வழிநடத்துகிறார்.

நானும் ரௌடிதான் நிகழ்ச்சியின் உண்மையான சிறப்பம்சம்அதன் சிறு போட்டியாளர்களே! அவர்கள் கொண்டிருக்கும்உற்சாகமும், கலாட்டாவும் நிகழ்ச்சியை தொடங்கி முடியும்வரை உங்களை வசீகரிக்கச் செய்யும். எதிர்பாராததிருப்பங்கள், குழந்தைகளின் சேட்டைகள், உற்சாகமானபோட்டிகள் மற்றும் சிரிப்பு நிறைந்த தருணங்கள் உங்கள்ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியாக மாற்றப் போகின்றன!

பிரமாண்டமான தொடக்கத்துக்கு மேலும் வண்ணம் சேர்க்க, பிரபல செப் வெங்கடேஷ் பட், மக்கள் மத்தியில் பிரபலமானநடிகர் தீனா மற்றும் அன்னம் தொடரின் நட்சத்திரமான அபிநட்சத்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககலந்துகொள்கிறார்கள்.

அட்டகாசமான போட்டிகள், மனமகிழ்வான தருணங்கள், பொழுதுபோக்கு நிரம்பிய ‘நானும் ரௌடிதான்’ வரும் ஞாயிறுமதியம் 12:30 மணிக்கு, (30 மார்ச் 2025) Sun TV-யில்பிரமாண்டமாக ஆரம்பமாகிறது! ஒவ்வொரு ஞாயிறும் உங்கள்குடும்பத்துடன் கண்டு மகிழ தயாராகுங்கள்.

Related Posts