செய்திக் குறிப்புகள்

அதர்வாவின் டிஎன்ஏ – அம்பேத்குமார் தயாரிக்கிறார்

சிவகார்த்திகேயன் நடித்த ’மனம் கொத்திப் பறவை’, கவின் நடித்த ’டாடா’, அருள்நிதி நடித்த’கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார், இப்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார்.

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம்
க்ரைம்-டிராமா ஜானரில் உருவாகிறது. இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் ’ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் பா.இரஞ்சித், எச்.வினோத், ராஜுமுருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி,எஸ்.ஆர்.பிரபு, செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதர்வாவுக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் இரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார்.

முழுப்படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது மற்றும் திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும்.

மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

படத்தின் பெயரும் அதர்வாவின் தோற்றமும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts