சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம் – புதிய தகவல்

ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் ஆகஸ்ட 14 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர் 2. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

அதேசமயம் ஜெயிலர் 2 படத்துக்கு அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த முடிவை ரஜினி எடுத்துவிட்டார் என்றும் விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் திரையுலகில் சொல்லப்படுகிறது.

ஆம், ஜெயிலர் 2 படத்துக்கு அடுத்து நித்திலன் சாமிநாதன் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்திருக்கிறாராம்.

2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு போம்மை படத்தையும், கடந்த ஆண்டு விஜய்சேதுபதியை வைத்து மகாராஜா என்கிற வெற்றிப்படத்தையும் கொடுத்தவர் நித்திலன் சாமிநாதன்.

மகாராஜா படம் வெளியான நேரத்தில் அவரை அழைத்துப் பாராட்டினார் ரஜினி.

அப்போதே, எனக்கான கதை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று நித்திலனிடம் ரஜினி சொல்லியிருந்தாராம்.

அதன்பின், ஒரு கதையை நித்திலன் சொல்லியிருக்கிறார்.அந்தக் கதை ரஜினிக்குப் பிடித்திருக்கிறதாம்.

அதனால் அதற்கு முழுதிரைக்கதை வடிவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் ரஜினி. அந்த வேலையில் இப்போது தீவிரமாக இருந்து கொண்டிருக்கிறார் நித்திலன்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்பது குறித்தான பேச்சுகளும் நடந்து கொண்டிருந்தனவாம்.

அதிலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது கூலி,ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்களையுமே தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டு ரஜினியின் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

உதயநிதி அமைச்சராகி துணைமுதலமைச்சரானதும் திரைப்படத் தயாரிப்புகளை நிறுத்தி வைத்திருந்தது ரெட்ஜெயண்ட் நிறுவனம்.

இப்போது ரஜினிகாந்த்துக்குப் பிடித்த இந்தக் கதையை ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினரும் கேட்டனராம்.அவர்களுக்கும் அந்தக் கதை பிடித்து இந்தப்படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று சொன்னார்களாம்.

ரஜினியும் அதை ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பின், அந்நிறுவனம் சார்பிலேயே ஓர் அலுவலகம் போடப்பட்டு அந்தக்கதையை முழுநீளத் திரைக்கதையாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

அந்தப்பணி முடிவடைந்த பிறகு, அந்த முழுநீளத் திரைக்கதை ரஜினிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கும் திருப்தி என்றதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts