ஜெயிலர் படத்தில் அதிருப்தி ரஜினிகாந்த் வேதனை
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் நல்லது என நினைத்து இவற்றை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதன்காரணமாகவே பி.வாசு இயக்கத்தில் இப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க மறுத்தார்.
ஜெயிலர் படப்பிடிப்பு ஒரு பக்கம் அடுத்த படத்துக்கான திரைக்கதை விவாதம் ஒரு பக்கம் என இருக்கும் ரஜினி இப்போது மிகவும் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
புதிய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினால் எல்லாம் புதிதாக இருக்கும் வேலை செய்ய எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இவர்கள் சிந்தனையும் என மனவோட்டமும் ஒத்துப்போகவே இல்லை. படம் தொடங்கியாயிற்றே என்பதால் வேறு வழியில்லாமல் அதை முடித்துக் கொடுக்கிறேன்.
நான் சந்திரமுகி 2 படத்தை விட்டிருக்கக்கூடாது, பி.வாசு எனக்காகவே எல்லாவற்றையும் யோசிப்பார், அவருடன் சேர்ந்து வேலைபார்க்காமல் விட்டது தப்பு என்று இப்போது புரிகிறது என தனக்கு நெருக்கமானவர்களிடம் மிகுந்த வேதனையுடன் பேசிக்கொண்டிருக்கிறாராம் ரஜினி.
மன ஆறுதலுக்காகவே பாபா படத்தை மீண்டும் வெளியிடுவது அதற்காக புதிதாக குரல்பதிவு செய்வது என இறங்கியிருக்கிறாராம்.











