October 17, 2026
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 உருவாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு, பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது.

இப்போது, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவரும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’. தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு சார் இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் தயாரிக்கவுள்ளார்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Posts