சினிமா செய்திகள்

கைதி வெற்றி – லோகேஷ் கனகராஜுக்கு உடனடி பலன் கொடுத்த விஜய் 64

அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின.

இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.

அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது.

இதனால் அப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு மிகுந்த நற்பெயர் கிடைத்திருக்கிறது. நல்ல பெயர் மட்டுமின்றி பொருளாதார ரீதியான பலனும் உடனடியாகக் கிடைத்திருக்கிறதாம்.

அவர் இப்போது விஜய் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும், விஜய் 64 என்றழைக்கப்படும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். 

கைதி படம் வெளியாகும் முன்பே அதாவது அக்டோபர் 3 ஆம் தேதியே அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

அக்டோபர் 25 இல் படம் வெளியாகி நல்ல வரவேற்பு என்றதால், லோகேஷ் கனகராஜுக்கு ஏற்கெனவே பேசிய சம்பளத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிகம் கொடுக்க முடிவு விஜய் 64 படக்குழுவினர் செய்திருக்கிறார்களாம்.

இதனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறாராம்.

Related Posts