சினிமா செய்திகள்

பிகில் இயக்குநர் அட்லி பற்றிப் பரவும் வதந்தி

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில் இந்தப்பெயர் வேகமாகப் பரவி வருகிறது.

தற்போது அந்த செய்தி ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2 ஆம் தேதி நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள்.அதை முன்னிட்டு இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இது உண்மையா? பொய்யா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Related Posts