சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் ஷாருக்கான் வரிசையில் அருண்விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது.

இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அங்கும் ஒர் சிறைக்குள் நடப்பதுபோல்தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இப்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகியன சென்னையில் நடந்துவருகிறது.

இவ்விரு படங்களிலும் சிறைச்சாலை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறதென்கிறார்கள்.

அந்த வரிசையில் அருண்விஜய் நடிக்கும் படமும் சேருகிறது. அந்தப்படத்திலும் சிறைச்சாலைக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.

ஜவான், ஜெயிலர் ஆகிய படங்களின் கதைக்களம் முறையே மும்பை, சென்னை என்று வைத்துக்கொள்ளலாம். அருண்விஜய் படத்தின் கதைக்களம் இலண்டன்.

இது தவிர இம்மூன்று படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? என்பதை இப்படங்கள் வந்த பிறகு பார்த்தால்தான் தெரியும்.

Related Posts