கார்டியன் வசூல் – படக்குழு மகிழ்ச்சி
மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர்நாள்.அந்நாளில்.
ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள கார்டியன் படம் வெளியானது. இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார்.
கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தப்படத்தை, சிம்பு,ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச்,விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்சந்தர் தயாரித்துள்ளார்.
இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வசூலிலும் குறைவில்லை என்று சொல்கிறார்கள்.
எல்லா ஊர்களிலும் நல்ல திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப்படம் முதல்நாளிலிலிருந்தே திருப்திகரமான வசூலைப் பெற்றுவருகிறது.
முதல்நாளில சுமார் எண்பது இலட்சம் வசூல் என்றும் அடுத்தநாளான நேற்றும் அதேஅளவு வசூல் இருந்ததென்றும் சொல்கிறார்கள்.
மூன்றாம் நாளான இன்று பல திரையரங்குகள், திரையுலகினரை மகிழ்விக்கும் சொல்லான ஹவுஸ்ஃபுல் என்கிற இடத்தைத் தொட்டிருக்கிறது.
வாரா வாரம் பல படங்கள் வெளியாகின்றன அவை எதுவுமே ஓடுவதில்லை என்கிற நிலையிலிருந்து மாறி இப்படத்துக்கு வரவேற்பும் வசூலும் கிடைத்திருப்பது படக்குழுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. திரையரங்கினரும் திருப்தியடைந்துள்ளனராம்.
நல்ல விசயம்தான்.









