கடைசி நேரத்தில் பாங்காக் பறந்த பத்துதல குழு – காரணம் என்ன?

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது.
இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
சிம்பு தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.பத்துதல படத்தின் குரல்பதிவை முடிக்கவில்லையாம்.
உடனே சென்னை வர வேண்டாம் என அவர் நினைத்திருக்கிறார்.அதேநேரம் பத்துதல படத்துக்கும் குரல்பதிவு செய்தாக வேண்டும்.
என்ன செய்யலாம் என யோசித்து தற்போது படக்குழு எடுத்திருக்கும் முடிவு என்னவெனில்?
சிம்பு தங்கியிருக்கும் பாங்காக்கின் புக்கட் தீவுக்கே படத்தை எடுத்துச் சென்று அங்குள்ள ஓர் ஒலிப்பதிவுக்கூடத்தில் சிம்புவை பேசவைக்கத் திட்டமிட்டார்களாம்.
சிம்புவும் இதற்கு ஒப்புக்கொண்டதால் படக்குழு பாங்காக் பறந்திருக்கிறதாம்.