September 18, 2021
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா?

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்,இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இப்போது பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

நடனப்புயல் என்று பெயர் பெற்ற பிரபுதேவா நடிக்கும் இந்தப்படத்துக்கு பொய்க்கால்குதிரை என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இந்தப் பெயருக்குக் காரணம் இருக்கிறதாம். படத்தில் பிரபுதேவாவின் வேடத்துக்கேற்பவே இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

நன்றாக நடனமாடுபவர் படத்துக்குப் பொய்க்கால் குதிரை என்று பெயர் வைத்திருப்பது முரணாக இருக்கிறது என்றாலும் படம் வரும்போது அதுவே பெரும் பலமாக இருக்கும் என்கிறார்கள்.

Related Posts