விஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது?
விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது..
இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன.அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இயக்குநர் வம்சி அளித்த ஒரு பேட்டியில் இது குறித்துக் கூறியிருந்தார்.அதனால் அவர் மீது விஜய் அதிருப்தி அடைந்துள்ளார் என்றும் எனவே வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர்’ வம்ஷி பைடிபள்ளி அண்மையில் (ஜூலை 27,2021) தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.இதையொட்டி இயக்குநர் வம்சியை வாழ்த்திய பாடகர் கிரிஷ், ”எனக்கு பிடித்த நபர் மற்றும் இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் நண்பருக்கு இது அற்புதமான ஆண்டாக இருக்க வாழ்த்துகள். விஜய் அண்ணாவுடன் உங்கள் அடுத்த படத்திற்கு காத்திருப்பு மற்றும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், விஜய்யின் அடுத்த படத்தை வம்சி இயக்குவது உறுதி என்று சொல்லப்பட்டது. ஆனால்,ஜூலை 27 மாலை 4.30 மணிக்கு பதிவிட்ட அந்த ட்வீட்டை நேற்று (ஜூலை 28) நீக்கியுள்ளார்.
அதனால் மீண்டும் விஜய்யின் அடுத்த படம் குறித்த ஐயம் தொடர்கிறது.